- Details
- எழுதியவர்: ஸ்தோத்திரம்
- பிரிவு: பாடல் வரிகள்
நம் தேவனைத் துதித்துப்பாடி
அவர் நாமம் போற்றுவோம்
களிகூர்ந்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம்
துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம்
அவர் நாமம் போற்றுவோம் - (நம் தேவனைத் துதித்துப்பாடி)
நம் தேவனைத் துதித்துப்பாடி
அவர் நாமம் போற்றுவோம்
களிகூர்ந்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம்
துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம்
அவர் நாமம் போற்றுவோம் - (நம் தேவனைத் துதித்துப்பாடி)
அனைத்து சமயத்து மெய்ப்பொருள் இயேசுவே
வேதங்கள் கூறிடும் கருப்பொருள் இயேசுவே
மெய்ப்பொருள் இயேசுவே...
உண்மை என்பது ஒன்றே ஒன்றாகும்
அண்மையில் சேர்ந்திட்டால் அதுவும் புலனாகும்
மெய்ப்பொருள் இயேசுவே...
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார் - இயேசு
தேடுங்கள் கிடைக்குமென்றார்
பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா
சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் ஏசுப்பிதா
ஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே
ஆகமங்கள் ஐம்பதாறினையும் ஐயம் தீர உணர்ந்தார்
இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரே
எல்லா உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே - (கேளுங்கள் தரப்படும்)
திருப்பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை இயேசுவே
தமதன்பைக் கண்டடைந்தேன்
தேவ சமூகத்திலே - 2
இளைப்பாறுதல் தரும் தேவா
களைத்தோரைத் தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்கு தங்கிடுவேன் - 2
இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
வாசம் செய்கிறாரே - 2
தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தம் ஜனத்தாரின் மத்தியிலாம் - 2
தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே - 2 - (இதோ மனுஷரின் மத்தியில்)
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
ஏசாயா 9:6