பல்லவி

ஆதி பிதா குமாரன் - ஆவி திரியேகர்க்கு
அனவரதமும் ஸ்தோத்ரம்! - திரியேகர்க்கு
அனவரதமும் ஸ்தோத்ரம்

அனுபல்லவி

நீத முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் - (2)
நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன் - (2)
நிறைந்த சத்திய ஞான மனோகர
உறைந்த நித்திய வேதா குணாகர
நீடு வாரி திரை சூழ மேதினியை
மூடு பாவ இருள் ஓடவே அருள் செய் - (ஆதி பிதா குமாரன்)


சரணம்

எங்கணும் நிறைந்த நாதர் - பரிசுத்தர்கள்
என்றென்றைக்கும் பணி பாதர்
துங்கமா மறைப்பிர போதர் - கடைசி நடு
சோதனைசெய் அதி நீதர்
பங்கில்லான் , தாபம் இல்லான் ,பகர்அடி முடிவில்லான் - (2)
பன் ஞானம்,சம்பூரணம் ,பரிசுத்தம் ,நீதி என்னும் - (2)
பண்பதாய்சு யம்பு விவேகன்
அன்பிரக்கத யாளப்பிரவாகன்
பார்தலத்தில் சிருஷ்டிப்பு , மீட்பு ,பரி
பாலனைத்தையும் பண்பாய் நடத்தியருள் - (ஆதி பிதா குமாரன்)

நீதியின் செங்கோல் கைக்கொண்டு -நடத்தினால் நாம்
நீணலத்தில்லாமல் அழிந்து
தீதறு நரகில் தள்ளுண்டு -மடிவோ மென்று
தேவ திருவுளம் உணர்ந்து
பாதகர்க் குயிர் தந்த பாலன் ஏசுவைக் கொண்டு - (2)
பரண் எங்கள்மிசை தயை வைத்தனர் - இது நன்று - (2)
பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம்
இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்
சூரியன் முன் இருள் போலவே சிதறும் - (ஆதி பிதா குமாரன்)

தேடுதல்

இன்றைய வசனம்

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.


ஏசாயா 9:6