மாறிடா எம்மா நேசரே - ஆ
மாறாதவர் அன்பெந்நாளுமே
கல்வாரிச் சிலுவை மீதிலே
காணுதே இம்மா அன்பிதே
ஆ! இயேசுவின் மகா அன்பிதே
அதன் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணையேதும் வேறில்லையே
இணை ஏதும் வேறில்லையே
1. பாவியாக இருக்கையிலே - அன்பால்
பாரில் உன்னைத் தேடி வந்தாரே
நீசன் என்றுன்னைத் தள்ளாமலே
நேசனாக மாற்றிடவே - (ஆ! இயேசுவின்)
2. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் - தம்
உள்ளம் போல் நேசித்ததினால்
அல்லல் யாவும் அகற்றிடவே
ஆதி தேவன் பலியானாரே - (ஆ! இயேசுவின்)
3. ஆவியால் அன்பைப் பகிர்ந்திட - தூய
தேவனின் விண் சாயல் அணிய
ஆவியாலே அன்பைச் சொரிந்தார்
ஆவலாய் அவரைச் சந்திக்க - (ஆ! இயேசுவின்)
4. நியாய விதி தினமதிலே - நீயும்
நிலையாகும் தைரியம் பெறவே
பூரணமாய் அன்பு பெருக
புண்ணியரின் அன்பு வல்லதே - (ஆ! இயேசுவின்)
5. பயமதை நீக்கிடுமே - யாவும்
பாரினிலே சகித்திடுமே
அது விசுவாசம் நாடிடுமே
அன்பு ஒருக்காலும் ஒழியாதே - (ஆ! இயேசுவின்)
மாறிடா எம்மா நேசரே - Marida Em Ma Nesare
- Details
- எழுதியவர்: ஸ்தோத்திரம்
- பிரிவு: பாடல் வரிகள்