இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
வாசம் செய்கிறாரே - 2

தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தம் ஜனத்தாரின் மத்தியிலாம் - 2
தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே - 2 - (இதோ மனுஷரின் மத்தியில்)


தேவ ஆலயமும் அவரே
தூய ஒளிவிளக்கும் அவரே - 2
ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும்
சுத்த ஜீவநதியும் அவரே - 2 - (இதோ மனுஷரின் மத்தியில்)

மகிமை நிறை பூரணமே
மகா பரிசுத்த ஸ்தலமதுவே - 2
என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே
எங்கள் பாதங்கள் நிற்கிறதே - 2 - (இதோ மனுஷரின் மத்தியில்)

சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார் - 2
சீர் மிகுந்திடுமெய் சுவிசேஷந்தனை
கூறி உயர்த்திடுவோம் உம்மையே - 2 - (இதோ மனுஷரின் மத்தியில்)

முன்னோடியாய் இயேசு பரன்
மூலைக்கல்லாகி சீயோனிலே - 2
வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம் - 2 - (இதோ மனுஷரின் மத்தியில்)


தேடுதல்

இன்றைய வசனம்

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.


ஏசாயா 9:6