ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன் - (2)
நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே - (2)
1. வருடங்கள் காலங்களாய்
என்னை வழுவாமல் காத்தீரையா - (2)
உம் வல்லக்கரத்தால்
நீர் என்னைத் தாங்கினீர்
உந்தன் சிறகாலே மூடிக் காத்திட்டீர் - (2) - (நன்றி இயேசுவே)
2. வாக்குத்தத்தம் தந்தவரே
உந்தன் வாக்கில் உண்மை உள்ளவரே - (2)
யார் மறந்தாலும்
நான் மறவேனே
என்ற வாக்கெனக்கு அளித்தவரே - (2) - (நன்றி இயேசுவே)
3. எதிர்காலம் உம் கையிலே
எந்தன் பயம் யாவும் நீங்கினதே - (2)
நீர் என் பக்கத்தில்
நான் பயப்படேனே
எந்தன் நிழலாக இருக்கின்றீரே - (2) - (நன்றி இயேசுவே)
ஒரு நாளும் எனை மறவா தெய்வம் - Oru naalum enai maravaa dheivam
- Details
- எழுதியவர்: ஸ்தோத்திரம்
- பிரிவு: பாடல் வரிகள்