யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்

1. வேதாளக் கணங்கள் ஓடிடவே
ஓடிடவே உருகி வாடிடவே - (யூத ராஜ சிங்கம்)

2. வானத்தின் சேனைகள் துதித்திடவே
துதித்திடவே பரனைத் துதித்திடவே - (யூத ராஜ சிங்கம்)


3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன
தெறிபட்டன நொடியில் முறிபட்டன - (யூத ராஜ சிங்கம்)

4. எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே
எங்கும் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே - (யூத ராஜ சிங்கம்)

5. மாதர் தூதரைக் கண்டக மகிழ்ந்தார்
அகமகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார் - (யூத ராஜ சிங்கம்)

6. உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
மரிப்பதில்லை இனி மரிப்பதில்லை - (யூத ராஜ சிங்கம்)

7. பாவத்திற்கென்று ஒரு தரம் மரித்தார்
அவர் மரித்தார் ஒரே தரம் மரித்தார் - (யூத ராஜ சிங்கம்)

8. கிறிஸ்தவரே நாம் அவர் பாதம் பணிவோம்
பாதம் பணிவோம் பதத்தை சிரம் அணிவோம் - (யூத ராஜ சிங்கம்)

தேடுதல்

இன்றைய வசனம்

சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.


சகரியா 9:9