இயேசுவின் நாமமே திருநாமம் – முழு
இருதயத்தால் தொழுவோம் நாமும்

1. காசினியில் அதனுக் கிணையில்லையே - விசு
வாசித்த வர்களுக்குக் குறையில்லையே - 2 - ( இயேசுவின் நாமமே திருநாமம் )

2. இத்தரையில் மெத்தவதி சயநாமம் - அதை
நித்தமுந் தொழுபவர்க்கு ஜெய நாமம் - 2 - ( இயேசுவின் நாமமே திருநாமம் )


3. உத்தம மகிமைப் பிரசித்த நாமம் - இது
சத்திய விதேய மனமொத்த நாமம் - 2 - ( இயேசுவின் நாமமே திருநாமம் )

4. விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம் - கடி
கண்டதிர்ந்து பயந்தோடு தேவநாமம் - 2 - ( இயேசுவின் நாமமே திருநாமம் )

5. பட்சமுடன் ரட்சைசெயு முபகாரி - பெரும்
பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி - 2 - ( இயேசுவின் நாமமே திருநாமம் )

தேடுதல்

இன்றைய வசனம்

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.


ஏசாயா 9:6