இயேசுவின் நாமத்தினால்
கூடிடும் சமயங்களில்
திவ்விய அவர் சமூகம்
நம் அருகினில் இருக்கிறது - 2

1. கேளுங்கள் கொடுக்கப்படும்
தேடுங்கள் கண்டடைவீர் - 2
மாறாத தேவன் மறைவாக்கு இதுவே
மாறாது எ(இ)ந்நாளிலும் - 2

2. பாடுங்கள் பரவசமாய்
பரமன் இயேசு அன்பினையே - 2
துதிக்கின்றபோது எழுகின்ற நெருப்பு
மகிமையைக் காணச் செய்யும் - 2

3. கண்ணீர் துடைத்திடுவார்
கரங்கள் பற்றி நடத்திடுவார் - 2
அழைக்கின்ற பக்தர் குரலினைக் கேட்டு
ஆசீகள் அளித்திடுவார் - 2

தேடுதல்

இன்றைய வசனம்

சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.


சகரியா 9:9