மாரநாதா... மாரநாதா...
இயேசு ராஜா வந்தார்... இயேசு ராஜா வந்தார்
இரத்தம் சிந்தி இரட்சிப்பை தந்தார்... இரத்தம் சிந்தி இரட்சிப்பை தந்தார்
இயேசு ராஜா வருவார்... இயேசு ராஜா வருவார்
நித்திய ஜீவன் தருவார்... நித்திய ஜீவன் தருவார்
தேவாதி தேவனை ஆராதிப்போம்
தேடிவந்த இயேசுவை ஆர்பரிப்போம்
தேவாதி தேவனை ஆராதிப்போம்
தேடிவந்த இயேசுவை ஆர்பரிப்போம் - ( இயேசு ராஜா வந்தார் )
பாவிகளை மன்னித்திட இயேசு வந்தார்
பரிசுத்த வாழ்வை தர இயேசு வந்தார்... இயேசு வந்தார்
கட்டுக்களை அறுத்திட இயேசு வந்தார்
காயங்களை ஆற்றிடவே இயேசு வந்தார்... இயேசு வந்தார்
நினையாத நேரத்திலே இயேசு வருவார்
கண்கள் கண்டு புலம்பிட மீண்டும் வருவார்
மேகங்களின் வழியாய் இயேசு வருவார்
எக்காள சத்தத்தோடு மீண்டும் வருவார் - ( இயேசு ராஜா வந்தார் )
அன்பின் முழு ரூபமாக இயேசு வந்தார்
இருள் நீக்கும் ஒளியாக இயேசு வந்தார்... இயேசு வந்தார்
சாத்தானை ஜெயித்திட இயேசு வந்தார்
பாவங்களை மாற்றிடவே இயேசு வந்தார்... இயேசு வந்தார்
அக்கினியின் கண்களோடு இயேசு வருவார்
பட்டயத்தை கையில் ஏந்தி மீண்டும் வருவார்
சாத்தானை அழித்திட இயேசு வருவார்
ஆரவார சத்தத்தோடு மீண்டும் வருவார் - ( இயேசு ராஜா வந்தார் )