இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது

1. பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே - 2
தயங்கிடாதே தாவி ஓடி வா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா - 2 - (இயேசு கிறிஸ்துவின் அன்பு)


2. உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கட்காய் அவர் நொறுக்கப்பட்டார் - 2
உனக்காகவே அடிகள் பட்டார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார் - 2 - (இயேசு கிறிஸ்துவின் அன்பு)

3. கள்ளர் மத்தியில் ஒரு கள்வனை போல
குற்றமற்ற கிறிஸ்து இயேசு தொங்கினாரே - 2
பாவி உனக்காய் அவர் கரங்கள்
பார சிலுவை சுமந்தேகுதே - 2 - (இயேசு கிறிஸ்துவின் அன்பு)

தேடுதல்

இன்றைய வசனம்

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.


ஏசாயா 9:6