இயேசப்பா உம்மைத்தேடி வந்தேனே
இங்கு எல்லாமே விட்டு விட்டு வந்தேனே
எனக்கெல்லாமே நீர் தானே
என் வாழ்வெல்லாம் நீர் தானே
என் சொந்தம் பந்தம் யாவும் நீரே
இயேசப்பா உம்மைத்தேடி வந்தேனே
இங்கு எல்லாமே விட்டு விட்டு வந்தேனே
சொந்தம் என்று சொன்னவுடனே
உம்மைத்தானே நினைக்கின்றேன்
உம்மை அறிந்த நாளில் இருந்து
உம்மையே அண்டி கிடக்கின்றேன்
அன்பு என்றாலே உமது அன்பு ஒன்றுதானே
என்றும் மாறாத அன்பு அய்யா
உயிரே உயிரே இங்கு நீர் இன்றி நான் இல்லையே
உம்மை அன்றி யாரை நம்பி
நானும் தேடி போவது - ( இயேசப்பா உம்மைத்தேடி )
என் மனதின் வேதனை எல்லாம்
புரிந்துகொள்வார் யாருமில்லை
இதயம் நொறுங்கி கலங்கும் நேரம்
அன்பு காட்டவும் யாருமில்லை
அன்பே நீர் மட்டும் என் வாழ்வில் இல்லை என்றல்
என்றோ மண்ணாகி போயிருப்பேன்
இயேசுவே இயேசுவே
என்மேல் கரிசனை உள்ளவரே
என்னை அறிந்த என் மனம் புரிந்த
ஒரு ஜீவன் நீரே அய்யா - ( இயேசப்பா உம்மைத்தேடி )
இயேசப்பா உம்மைத்தேடி வந்தேனே - Yesappa Ummaithedi Vandhaenae
- Details
- எழுதியவர்: ஸ்தோத்திரம்
- பிரிவு: பாடல் வரிகள்