விசுவாசமே விசுவாசமே விலைமிக்க விசுவாசமே
விசுவாசமே விசுவாசமே விலைமிக்க விசுவாசமே
இயேசுவையே விசுவாசித்தால்
எல்லாம் கூடும் நமக்கெல்லாம் கூடும் - 2
மலைகளை பெயர்த்திடும் விசுவாசமே
மாப்பெரும் காரியம் செய்திடுமே - 2
தேவனின் மகிமையை நாம் காணவே
விசுவாசிப்போம் நாம் பதில் காணுவோம் - 2 - ( விசுவாசமே விசுவாசமே )
உலகினை ஜெயித்திடும் விசுவாசமே
நம்மிடம் இருந்தால் அது போதுமே - 2
மாப்பெரும் அறுவடை நாம் காணவே
விசுவாசிப்போம் நாம் ஜெயம் பெறுவோம் - 2 - ( விசுவாசமே விசுவாசமே )
நோய்களை விரட்டிடும் விசுவாசமே
பேய்களை வார்த்தையால் துரத்திடுமே - 2
சந்தோச சுகவாழ்வை நாம் காணவே
விசுவாசிப்போம் நாம் நலம் காணுவோம் - 2 - ( விசுவாசமே விசுவாசமே )