விந்தை கிறிஸ்தேசு ராஜா!
உந்தன் சிலுவையென் மேன்மை
சுந்தரமிகும் இந்த பூவில்
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் - ( விந்தை கிறிஸ்தேசு ராஜா! )
1. திரண்ட செல்வம், உயர்ந்த கல்வி
செல்வாக்குகள் மிகவிருப்பினும் - 2
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
உரிய பெருமை யாவும் அற்பமே - 2 - ( விந்தை கிறிஸ்தேசு ராஜா! )
2. உம் குருசே ஆசிக்கெல்லாம்
ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம் - 2
துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்
தூய்மையடைந்து மேன்மையாகினேன் - 2 - ( விந்தை கிறிஸ்தேசு ராஜா! )
3. சென்னி, விலா, கை, கானின்று
சிந்துதோ துயரோடன்பு - 2
மன்னா இதைப் போன்ற காட்சி
எந்நாளிலுமே எங்கும் காணேன் - 2 - ( விந்தை கிறிஸ்தேசு ராஜா! )
4. இந்த விந்தை அன்புக்கீடாய்
என்ன காணிக்கை ஈந்திடுவேன் - 2
எந்த அரும் பொருள் ஈடாகும்?
என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் - 2 - ( விந்தை கிறிஸ்தேசு ராஜா! )