உன்னை அதிசயம் காணச் செய்வேன்
நீ அற்புதம் கண்டிடுவாய் (2)

என்று வாக்களித்தார் தேவன்
இன்று நிறைவேற்ற வந்து விட்டார் (2) - ( உன்னை அதிசயம் )

1. வழிதிறக்கும் அதிசயம் நடந்திடுமே
செங்கடலும் பிளந்தே வழிவிடுமே (2)
தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே
இடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே (2) - ( உன்னை அதிசயம் )

2. குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே
இறைமகனாம் இயேசுவால் நடந்திடுமே (2)
வாதையெல்லாம் மறைந்தே போகுமே
பாதையெல்லாம் நெய்யாய் பொழிந்திடுமே (2) - ( உன்னை அதிசயம் )

3. வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே
காரிருளில் பேரொளி வீசிடுமே (2)
வனாந்திரமே வழியாய் வந்தாலும்
வல்லவரின் கரமே நடத்திடுமே (2) - ( உன்னை அதிசயம் )


தேடுதல்

இன்றைய வசனம்

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.


ஏசாயா 9:6