துதியுங்கள் தேவனை
துதியுங்கள் தூயோனை - 2
1. அவரது அதிசயங்களை பாடி
அவர் நாமத்தை பாராட்டி,
அவரை ஆண்டவர் என்றறிந்து
அவரையே போற்றுங்கள் - 2
ஆப்ரகாமின் தேவனை
ஈசாக்கின் தேவனை
ஆர்ப்பரித்து வணங்குங்கள் - ( துதியுங்கள் தேவனை )
2. இஸ்ரவேலின் மக்களின் மன்னவனை
இடையூற்றினை போக்கினோனே
கானானின் தேசத்தை காட்டினோனே
கர்த்தரை போற்றுங்கள் - 2
ராஜாதி ராஜனை
கர்த்தாதி கர்த்தனை
ஆர்ப்பரித்து வணங்குங்கள் - ( துதியுங்கள் தேவனை )