பல்லவி:
ஸ்தோத்திரம் செய்வேனே - இரட்சகனை
ஸ்தோத்திரம் செய்வேனே - (3)

அனுபல்லவி:
பாத்திரமாக்க இம்மாத்திரம் கருணை வைத்த
பார்த்திபனை யூத கோத்திரனை என்றும் - (ஸ்தோத்திரம் செய்வேனே)


சரணங்கள்:
1. அன்னை மரிசுதனை - புல்மீது
அமிழ்து கழுதவனை - (3)
முன்னணை மீதுற்ற சின்ன குமாரனை - (2)
முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை - (ஸ்தோத்திரம் செய்வேனே)

2. செம்பொன் னுருவானைத் - தேசிகர்கள்
தேடும் குருவாணை - (3)
அம்பர மேவிய உம்பர் கணத்தோடு - (2)
அன்பு பெற நின்று பைம் பொன் மலர் தூவி - (ஸ்தோத்திரம் செய்வேனே)

3. கந்தை பொதிந்தவனை - வானோர்களும்
வந்தடி பணிபவனை - (3)
மந்தையர்கானந்த மாட்சியளிதோனை - (2)
வான பரண் என்னும் ஞான குணவானை - (ஸ்தோத்திரம் செய்வேனே)

தேடுதல்

இன்றைய வசனம்

சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.


சகரியா 9:9