சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
பரிசுத்தரே பரிசுத்தரே
ஆராதனை உமக்கு ஆராதனை - 4
கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் எங்கள் பரிசுத்தரே - 2 - ( ஆராதனை உமக்கு )
ஏழு குத்து விளக்கின் மத்தியிலே
உலாவிடும் எங்கள் பரிசுத்தரே - 2 - ( ஆராதனை உமக்கு )
ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே - 2 - ( ஆராதனை உமக்கு )
இருபுறமும் கருக்குள்ள
பட்டயத்தை கரங்களில் உடையவரே - 2 - ( ஆராதனை உமக்கு )
அக்கினி ஜுவாலை போன்ற கண்களையும்
வெண்கல பாதங்களை உடையவரே - 2 - ( ஆராதனை உமக்கு )
பரிசுத்தமும் சத்தியமும் - தாவீதின்
திறவுகோலை உடையவரே - 2 - ( ஆராதனை உமக்கு )