போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே
புதிய கிருபையுடனே
நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை
நாம் என்றும் பாடித்துதிப்போம் - 2

இயேசு என்னும் நாமமே என்
ஆத்துமாவின் கீதமே - என் நேசர் இயேசுவை
நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன் - 2

1. கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில் - 2
காக்கும் கரங் கொண்டு மார்பில் சேர்த்தணைத்த
அன்பை என்றும் பாடுவேன் - ( இயேசு என்னும் நாமமே )

2. யோர்தான் நதி போன்ற சோதனையிலும்
சோர்ந்தமிழ்ந்து மாளாதே
ஆர்க்கும் ஜெய தொனியோடே
பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன் - ( இயேசு என்னும் நாமமே )

3. தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால்
தாழ்த்தி என்னை அவர் கையில் தந்து
ஜீவபாதை என்றும் ஓடுவேன் - ( இயேசு என்னும் நாமமே )

4.பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற கட்டளையதால்
ஆவி ஆத்துமாவும் தேகம் யாவும் தந்து
என்றும் தொண்டு செய்குவேன் - ( இயேசு என்னும் நாமமே )


தேடுதல்

இன்றைய வசனம்

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.


ஏசாயா 9:6