ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி
உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா
முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியை
பின்மாரியாக இன்று பொழிந்திடுமே - 2

எண்ணெய் அபிஷேகமே என்தலையை நனைக்க
ஆவியில் நிரப்புமே பாத்திரம் வழிந்தோடும்
நீச்சல் ஆழம் மூழ்கியே நேசர் அன்பில் மகிழ
அக்கினி அபிஷேகம் எந்தன் ஆவல் தீர்த்திடும்


1. தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம்
போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே

2. ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம்
ஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும்

3. ஒருமனதோடு கூடி வந்துள்ளோம்
தேவ புத்திரர் என முத்திரை போடும்

4. ஜீவ பலியாக எம்மை ஒப்புவிக்கிறோம்
சகல சத்தியத்திலும் எம்மை நடத்தும்

5. ஆவியின் வரங்களை அருள் செய்யும் தேவா
ஆவியின் கனிகள் என்றும் ஈந்திடவே

தேடுதல்

இன்றைய வசனம்

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.


ஏசாயா 9:6