மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறும்போல் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே
வாஞ்சித்துக் கதறுதே - 2

தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்
கோட்டையும் நீர் என்றும் காப்பீர் - (மான்கள் நீரோடை வாஞ்சித்து)

தேவன் மேல் ஆத்துமாவே
தாகமாயிருக்கிறதே - 2
தேவனின் சந்நிதியில் நின்றிட
ஆத்துமா வாஞ்சிக்குதே - 2 - (தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்)


ஆத்துமா கலங்குவதேன்
நேசரை நினைத்திடுவாய் - 2
அன்பரின் இரட்சிப்பினால் தினமும்
துதித்துப் போற்றிடுவேன் - 2 - (தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்)

யோர்தான் தேசத்திலும்
எர்மோன் மலைகளிலும் - 2
சிறுமலைகளிலிருந்தும் உம்மை
தினமும் நினைக்கின்றேன் - 2 - (தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்)

கன்மலையாம் தேவன்
நீர் என்னை ஏன் மறந்தீர் - 2
எதிரிகளால் ஒடிங்கி அடியேன்
துக்கத்தால் திரிவதேனோ - 2 - (தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்)

தேவரீர் பகற்காலத்தில்
கிருபையைத் தருகின்றீர் - 2
இரவினில் பாடும் பாட்டு எந்தன்
வாயினிலிருக்கிறது - 2 - (தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்)


தேடுதல்

இன்றைய வசனம்

சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.


சகரியா 9:9