கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
நீ கலங்காதே மனமே - 2

1. கையிடும் வேலையில் ஆசீர்வாதமும்
கலங்களில் நிரம்பிடும் தானியமும் - 2
நிறைவான நன்மை உண்டாக
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் - 2 - ( கர்த்தர் உன்னை மேன்மையாக )

2. சத்துருக்கள் எதிராய் எழும்பும்போது
கர்த்தரே யுத்தத்தை செய்திடுவார் - 2
வெற்றி மேல் வெற்றியை உனக்கு தந்து
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் - 2 - ( கர்த்தர் உன்னை மேன்மையாக )

3. உன்னை அவர் தனக்காக தெரிந்துகொண்டார்
தன் பெயரை உனக்கு வழங்கினாரே - 2
சுற்றமும் நண்பரும் உன்னை மதிக்க
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் - 2 - ( கர்த்தர் உன்னை மேன்மையாக )

4. உன் தேசம் முழுவதும் மழை பொழியும்
உனக்காக பொக்கிஷத்தை திறந்திடுவார் - 2
பிறருக்கு நீயும் கடன் கொடுக்க
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் - 2 - ( கர்த்தர் உன்னை மேன்மையாக )

தேடுதல்

இன்றைய வசனம்

சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.

சகரியா 9:9