கர்த்தர் தாமே நம் முன்னே போவார்
கர்த்தர் தாமே நம் பின் வந்து காப்பார் - 2
நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - 2
உதவிடும் கன்மலை இயேசுவை நோக்குவோம்
விலகிடார் கைவிடார் தாங்குவார் உறங்கிடார் - 2
நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - 2 - ( கர்த்தர் தாமே நம் முன்னே )
உயிர் தரும் நேயனே சுகம் தரும் நேயனே
கனிவுடன் நடத்துவார் பரிவுடன் தேற்றுவார் - 2
நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - 2 - ( கர்த்தர் தாமே நம் முன்னே )
உலகுக்கு வெளிச்சம் நாம் பூமிக்கு உப்பு நாம்
மரிக்கும் வித்து நாம் பரமனின் சொத்து நாம் - 2
நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - 2 - ( கர்த்தர் தாமே நம் முன்னே )