கனிவின் கரம் என்னை தாங்கிட நான் அஞ்சிடேன்
இருள் உலகின் பயணங்களில் நீர் என்னுடன்
வரும் போது உம் சமூகம்
அருள் வேண்டும் எந்தன் ஜெபம் - 2
வாரும் என் தேவா என வேண்டி நான் இருக்க
நீர் இல்லா நானும் நான் இல்லை என நினைக்க - (கனிவின் கரம்)


என்ன ஆனாலும் உந்தன் அன்பில்
என்றும் நீர் என்னை சேர்த்திடுவாயே
ஜீவனானாலும் மரண மானாலும்
உம்மில் நிலைத்து நான் இருப்பேன்
உம் முகம் நோக்கி அலைகளை கடப்பேன்
உம் நாமம் உச்சரித்து உயிர்பெறுவேன் - 2
காலமெல்லாம் உம்மை துதிப்பேன்
நன்றிகளை ஏறெடுப்பேன் - 2 - (கனிவின் கரம்)

வானம் பூமி மாறினாலும்
என்றும் மாறா நல் நேசரே
வாக்குத்தத்தம் தந்த தேவா
என்றும் காக்கும் நல் நாயகா
உம் நாமம் கொண்டு சாத்தானை வெல்வேன்
உம் இரத்தம் கொண்டு ஜெயித்திடுவேன் - 2
வாழ் நாளெல்லாம் உம்மை புகழ்வேன்
நன்றிகளை ஏறெடுப்பேன் - 2 - (கனிவின் கரம்)

தேடுதல்

இன்றைய வசனம்

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.


ஏசாயா 9:6