கடைசி காலம் இதுவே
கர்த்தர் இயேசு வரவே
ஜீவாதிபதி இயேசு ராஜன்
சீக்கிரம் வருகின்றார் எமக்காய் - (கடைசி காலம் இதுவே)
இனி ஓன்றும் நமக்கிங்கு இல்லை
நம் வாஞ்சையோ பரலோகமே - 2
போராடியே ஓடிடுவோம்
ஜீவ கிரீடம் சூடி வாழ்வோம் - 2 - (கடைசி காலம் இதுவே)
எக்காள தொனி வானில் முழங்க
இயேசு பக்தரை ஒன்றாய் சேர்ப்பார் - 2
உலக ஆசை வெறுத்துமே நாம்
பரிசுத்தமாய் என்றும் வாழ்வோம் - 2 - (கடைசி காலம் இதுவே)
மணவாளன் இயேசு வரும் நாள்
நாம் மறுரூபம் அடைந்திடுவோம் - 2
விழிப்புடனே காத்திருப்போம்
வேகமே ஏசுவே வருவார் - 2 - (கடைசி காலம் இதுவே)