கால் மிதிக்கும் தேசமெல்லாம் - என்
கர்த்தருக்குச் சொந்தமாகும்
கண்பார்க்கும் பூமியெல்லாம்
கல்வாரி கொடி பறக்கும்
1. பறக்கட்டும் பறக்கட்டும்
சிலுவையின் ஜெயக்கொடி - அல்லேலூயா
உயரட்டும் உயரட்டும்
இயேசுவின் திருநாமம் - அல்லேலூயா
2. எழும்பட்டும் எழும்பட்டும்
கிதியோனின் சேனைகள் - அல்லேலூயா
முழங்கட்டும் முழங்கட்டும்
இயேசுதான் வழியென்று - அல்லேலூயா
3. செல்லட்டும் செல்லட்டும்
ஜெபசேனை துதிசேனை - அல்லேலூயா
வெல்லட்டும் வெல்லட்டும்
எதிரியின் எரிகோவை - அல்லேலூயா
4. திறக்கட்டும் திறக்கட்டும்
சுவிசேஷ வாசல்கள் - அல்லேலூயா
வளரட்டும் வளரட்டும்
அபிஷேகத் திரு(ச்)சபைகள் - அல்லேலூயா
கால் மிதிக்கும் தேசமெல்லாம் - Kaalmithikkum Desamellaam
- Details
- எழுதியவர்: ஸ்தோத்திரம்
- பிரிவு: பாடல் வரிகள்