காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்
கருத்துடன் பாடிடுவேன்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எனத்தூதர்
பாடிடும் தொனி கேட்குதே
1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
கிருபையும் இரட்சிப்புமானார் - 2
அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி
அனுதினம் வாழ்ந்திடுவேன் - (காலையும் மாலையும் எவ்வேளையும்)
2. எனக்கெதிராய் ஓர் பாளயமிறங்கி
என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும் - 2
பயப்படேன் எதிராளி நிமித்தமாய் செவ்வையான
பாதையில் நடத்திடுவார் - (காலையும் மாலையும் எவ்வேளையும்)
3. ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன்
என்றும் தம் மகிமையைக் காண - 2
ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் தங்குவதை
வாஞ்சித்து நாடிடுவேன் - (காலையும் மாலையும் எவ்வேளையும்)
4. தீங்கு நாளில் தம் கூடார மறைவில்
தேடிச் சேர்த்தென்னை மறைப்பார் - 2
உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னைப் பாதுகாத்து
உயர்த்துவார் கன்மலைமேல் - (காலையும் மாலையும் எவ்வேளையும்)
5. எந்தன் முகத்தைத் தேடுங்கள் என்று
என் கர்த்தர் சொன்னதினாலே - 2
தம் முகத்தைத் தேடுவேனே கூப்பிடும் என் சத்தம் கேட்டு
தயவாகப் பதிலளிப்பார் - (காலையும் மாலையும் எவ்வேளையும்)
6. தகப்பனும் தாயும் கைவிட்டாலும் என்
கர்த்தர் என்னைச் சேர்த்து கொள்வார் - 2
எந்தன் உள்ளம் ஸ்திரமாகத் திடமாகக் கர்த்தருக்கே
என்றென்றும் காத்திருக்கும் - (காலையும் மாலையும் எவ்வேளையும்)
7. எனக்காக யாவும் செய்து முடிப்பார்
என் கர்த்தர் வாக்குமாறிடார் - 2
தமக்கென்றும் பயந்திடும் பக்தர் யாவர்
விருப்பமும் தவறாமல் நிறைவேற்றுவார் - (காலையும் மாலையும் எவ்வேளையும்)