இருதயம் இயேசுவின் சிங்காசனம்
(நம்) இருதயம் இயேசுவின் சிங்காசனம்
நம்மை இயேசுதான் ஆள வேண்டும்
இந்த உலகம் ஆள்வது நியாயமில்லை - 2 - (இருதயம் இயேசுவின்)
1. என் நாயகரை நான் மறந்து
இந்த உலகத்தை நேசித்து திரிந்தேனே - 2
கர்த்தர் என்னை சிட்சித்து உணர செய்தாரே
கர்த்தர் என்னை இரட்சித்து உணர செய்தாரே - 2 - (இருதயம் இயேசுவின்)
2. என் பாவத்தை சுயமாய் செய்த வேளையில்
என்னை தேடி வந்தாரே - 2
கர்த்தர் முந்தினவைகளை மறக்க செய்தாரே
கர்த்தர் பரிசுத்தமாய் வாழ செய்தாரே - 2 - (இருதயம் இயேசுவின்)
3. இந்த உலகத்தில் யாரும் இல்லை என்று
நான் சாக நினைத்த வேளையிலே - 2
கர்த்தர் எனக்கு புதிய காரியம் செய்தாரே
கர்த்தர் எனக்கு இன்றே தோன்ற செய்தாரே - 2 - (இருதயம் இயேசுவின்)