இறைவன் நமது வானகத் தந்தை
இதை உணர்ந்தாலே குளிர்ந்திடும் சிந்தை
குறைகள் தீரும் கவலைகள் மாறும்
குழம்பிய மனதில் அமைதி வந்தேறும்

1. பறவைகள் விதைப்பதும் அறுப்பதும் இல்லை
பத்திரப்படுத்தி வைப்பதுமில்லை
மறந்து விடாமல் அவைகளுக்குணவு - 2
வாரி வழங்கி - பேணியே காக்கும் (3)

2. வயல்வெளி மலர்களைப் பாரீர் அவைகள்
வருந்தி உழைப்பதும் நூற்பதுமில்லை
மயங்கிட வைக்கும் இவைபோல் சாலமோன் - 2
மன்னனும் என்றும் - உடுத்தியதில்லை (3)

3. எதனை உண்போம் எதனை உடுப்போம்
எதனைக் குடிப்போம் எனத் திகைக்காதே
முதலில் பரமனின் அரசின் நீதியை - 2
முனைந்து தேடிடு - சித்திக்கும் அனைத்தும் (3)


தேடுதல்

இன்றைய வசனம்

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.


ஏசாயா 9:6