எந்தன் கன்மலை ஆனவரே
என்னை காக்கும் தெய்வம் நீரே - 2
வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
மகிமைக்கு பாத்திரரே - 2

ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே


1. உந்தன் சிறகுகளின் நிழலில்
என்றென்றும் மகிழச் செய்தீர் - 2
தூயவரே என் துணையாளரே
துதிக்குப் பாத்திரரே - 2 - ( ஆராதனை உமக்கே )

2. எந்தன் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தந்தீரைய்யா - 2
இயேசு ராஜா என் பெலனானீர்
எதற்கும் பயம் இல்லையே - 2 - ( ஆராதனை உமக்கே )

3. எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
உம்மை புகழ்ந்து பாடிடுவேன் - 2
ராஜா நீர் செய்த நன்மைகளை
எண்ணி துதித்திடுவேன் - 2 - ( ஆராதனை உமக்கே )

தேடுதல்

இன்றைய வசனம்

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.


ஏசாயா 9:6