என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் - 2

என் உயிரான உயிரான உயிரான இயேசு - 2 - (என் உயிரான இயேசு என் உயிரோடு)

1. உலகமெல்லாம் மறக்குதையா
உணர்வு எல்லாம் இனிக்குதையா - 2
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே - 2 - (என் உயிரான உயிரான உயிரான)


2. உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும் - 2
இரவும் பகலுமையா
உந்தன் வசனம் தியானிக்கிறேன் - 2 - (என் உயிரான உயிரான உயிரான)

3. உம் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே - 2
நீதிமான் உமக்குள்ளே ஓடி
சுகமாய் இருப்பானே - 2 - (என் உயிரான உயிரான உயிரான)


தேடுதல்

இன்றைய வசனம்

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.


ஏசாயா 9:6