என் ஜெபத்தை கேட்கிறார்
எனக்கு அருள்கிறார்
கன்மலையில் என்னை வைத்து
பாதுகாக்கிறார் - 2

1. அலைகள் என்மேல் புரண்டாலும்
அஞ்சிடமாட்டேன் - 2
மலைகள் என்மேல் விழுந்தாலும்
பயப்படமாட்டேன் - 2 - ( என் ஜெபத்தை கேட்கிறார் )

2. வறண்ட நிலத்தில் நான் நடந்து சென்றாலும்
வழியறியாமல் திகைத்து நின்றாலும் - 2
வருத்தம் தாகம் பசியும் என்னை
நெருங்கவில்லையே - 2
வழிநடத்தும் தேவன்கரம்
குறுகவில்லையே - 2 - ( என் ஜெபத்தை கேட்கிறார் )

3. வியாதி வறுமையால் சோர்ந்துவிட்டாலும்
வாசல் கதவுகள் எல்லாம் அடைத்துக்கொண்டாலும் - 2
ஒன்றுமென்னை கலங்கவைக்க
முடியவில்லையே - 2
கர்த்தர் கிருபை என்னை விட்டு
விலகவில்லையே - 2 - ( என் ஜெபத்தை கேட்கிறார் )

3. கடலின் அலையில் நான் பயனம் செய்தாலும்
காற்றும் புயலுமாய் என்னை எதிர்த்து வந்தாலும் - 2
எதுவுமென்னை தடுத்து நிறுத்த
முடியவில்லையே - 2
கர்த்தர் முன்னே செல்வதாலே
கவலையில்லையே - 2 - ( என் ஜெபத்தை கேட்கிறார் )

4. அத்திமரங்களில் இலையுதிர்ந்தாலும்
திராட்சை செடிகளில் கனி அழிந்தாலும் - 2
சுற்றி பஞ்சம் நேர்ந்தபோதும்
கலக்கமில்லையே - 2
கர்த்தர் கரங்கள் என்னைத்தாங்கும்
வருத்தமில்லையே - 2 - ( என் ஜெபத்தை கேட்கிறார் )


தேடுதல்

இன்றைய வசனம்

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.


ஏசாயா 9:6