எழுந்தார் இறைவன் - ஜெயமே ஜெயமெனவே
எழுந்தார் இறைவன்

1. விழுந்தவரைக் கரையேற்றப் - பாவத்
தழுந்து மனுக்குலத்தை மாற்ற - விண்ணுக்
கெழுந்து நாம் அவரையே போற்ற - (எழுந்தார் இறைவன்)


2. செத்தவர் மீண்டுமே பிழைக்க - உயர்
நித்திய ஜீவனை அளிக்கத் - தேவ
பக்தர் யாவரும் களிக்க - (எழுந்தார் இறைவன்)

3. கருதிய காரியம் வாய்க்கத் - தேவ
சுருதி மொழிகளெல்லாம் காக்க - நம்
இரு திறத்தாரையும் சேர்க்க - (எழுந்தார் இறைவன்)

4. சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் - கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க - இப்
பூவின் மீதுசபை செழிக்க - (எழுந்தார் இறைவன்)

5. ஏதுந் தீவினை செய்யாத் தூயன் - எப்
போதுமே நன்மைபுரி நேயன் - தப்
பாது காத்திடும் நல்லாயன் - (எழுந்தார் இறைவன்)

தேடுதல்

இன்றைய வசனம்

சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.


சகரியா 9:9