தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை
என்னைத் தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை!

ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க
ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க


1.உன்னதத்தில் தேவனுக்கு
மகிமை உண்டாகட்டும் - 2
இந்த பூமியிலே சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும் - 2 - ( ஐயா வாழ்க வாழ்க )

2.செவிகளை நீர் திறந்துவிட்டீர்
செய்வோம் உம் சித்தம் - 2
இந்தப் புவிதனிலே
உம் விருப்பம் பூரணமாகட்டுமே - 2 - ( ஐயா வாழ்க வாழ்க )

3.எளிமையான எங்களையே
என்றும் நினைப்பவரே -2
எங்கள் ஒளிமயமே துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலே - 2 - ( ஐயா வாழ்க வாழ்க )

4.தேடுகிற அனைவருமே
மகிழ்ந்து களிகூரட்டும் - 2
இங்கு பாடுகிற யாவருமே
பரிசுத்தம் ஆகட்டுமே - 2 - ( ஐயா வாழ்க வாழ்க )

5. குறை நீக்கும் வல்லவரே
கோடி ஸ்தோத்திரமே - 2
பாவக்கறைபோக்கும் கர்த்தாவே
கல்வாரி நாயகனே - 2 - ( ஐயா வாழ்க வாழ்க )

தேடுதல்

இன்றைய வசனம்

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.


ஏசாயா 9:6