தேவனே, நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.
மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே, தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்

1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் – பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட - 2
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! - ( தேவனே )

2. பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா, என்றன் தேவனே, - 2
கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் - ( தேவனே )

3. நித்திரையினின்று விழித்துக் – காலை எழுந்து
கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்; - 2
இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் - ( தேவனே )

4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் – பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும் - 2
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் - ( தேவனே )

தேடுதல்

இன்றைய வசனம்

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.


ஏசாயா 9:6