தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் - 2

1. நெருக்கப்பட்டும் மடிந்திடாமல்
கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே - 2
அவர் நல்லவர்
அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே - 2 - (தேவ கிருபை என்றுமுள்ளதே)

2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்
பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு - 2
முன்சென்றாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே - 2 - (தேவ கிருபை என்றுமுள்ளதே)

3. அக்கினி சோதனை பட்சிக்க வந்தும்
முட்செடி தன்னில் தோன்றிய தேவன் - 2
பாதுகாத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே - 2 - (தேவ கிருபை என்றுமுள்ளதே)

4. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய் - 2
என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்று முள்ளதே - 2 - (தேவ கிருபை என்றுமுள்ளதே)

5. வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும்
வீரன் நெகேமியா ஆவியை அளித்தே - 2
திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே
அவர் கிருபை என்றுமுள்ளதே - 2 - (தேவ கிருபை என்றுமுள்ளதே)

6. நித்திய தேவனாம் சத்திய பரன் தான்
நித்தமும் நம்முடன் இருப்பதாலே - 2
அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளதே - 2 - (தேவ கிருபை என்றுமுள்ளதே)


தேடுதல்

இன்றைய வசனம்

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.


ஏசாயா 9:6