அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
திரளாய் நிற்கும் யார் இவர்கள்?
சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
1. ஒரு தாலந்தோ, இரண்டு தாலந்தோ
ஐந்து தாலந்தோ உபயோகித்தோர்
சிறிதானதோ, பெரிதானதோ பெற்ற பணி
செய்து முடித்தோர் - (அழகாய் நிற்கும் யார் இவர்கள்)
2. காடு மேடு கடந்த சென்று
கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்
உயர்வினிலும் தாழ்வினிலும்
ஊக்கமாக ஜெபித்தவர்கள் - (அழகாய் நிற்கும் யார் இவர்கள்)
3. தனிமையிலும் வறுமையிலும்
லாசரு போன்று நின்றவர்கள்
யாசித்தாலும், போஷித்தாலும்
விசுவாசத்தைக் காத்தவர்கள் - (அழகாய் நிற்கும் யார் இவர்கள்)
4. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்
எல்லா மொழியும் பேசும் மக்களாம்
சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
சீர் போராட்டம் செய்து முடித்தோர் - (அழகாய் நிற்கும் யார் இவர்கள்)
5. வெள்ளை அங்கியைத் தரித்துக் கொண்டு
வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து
ஆர்ப்பரிப்பார் சிங்காசனம் முன்பு
ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று - (அழகாய் நிற்கும் யார் இவர்கள்)
6. இனி இவர்கள் பசி அடையார்
இனி இவர்கள் தாகமடையார்
வெயிலாகிலும், அனலாகிலும்
வேதனையை அளிப்பதில்லை - (அழகாய் நிற்கும் யார் இவர்கள்)
7. ஆட்டுக்குட்டி தான் இவர் கண்ணீரை
அற அகற்றித் துடைத்திடுவார்
அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே
அள்ளிப் பருக இயேசு தாமே - (அழகாய் நிற்கும் யார் இவர்கள்)
8. ஒன்றே ஒன்று என் வாஞ்சையாம்
அழகாய்நிற்போர் வரிசையில் –நான்
ஓர் நாளினில் நின்றிடவும்
இயேசு தேவா வழிநடத்தும்(அருள்புரியும்) - (அழகாய் நிற்கும் யார் இவர்கள்)