அந்த நாள் வந்திடும் இந்த உலகம் நின்றிடும்
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும்

1. இந்த நாள் வாழ்பவர் பரிசுத்தத்தில் தேறட்டும்
எக்காளம் எடுத்து எச்சரிக்கை கூறட்டும் - 2
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் - ( அந்த நாள் வந்திடும் )

2. இந்த நாள் வாழ்பவர் திறப்பின் வாசல் நிற்கட்டும்
பாவத்தில் ஊழ்பவர் ஊழ்கிடாமல் தடுக்கட்டும் - 2
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் - ( அந்த நாள் வந்திடும் )

3. இந்த நாள் வாழ்பவர் திறந்த வாசல் காணட்டும்
இராக்காலம் வருமுன்னர் சுதந்தரித்துக் கொள்ளட்டும் - 2
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் - ( அந்த நாள் வந்திடும் )

4. இந்த நாள் வாழ்பவர் ஆத்மாதாயம் செய்யட்டும்
அந்த நாள் வந்ததும் நட்சத்திரமாய் ஜொலிக்கட்டும் - 2
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் - ( அந்த நாள் வந்திடும் )

தேடுதல்

இன்றைய வசனம்

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

ஏசாயா 9:6