அன்பின் தேவன் இயேசு உன்னை
இன்றே அழைக்கின்றார்
அவர் உன்னை அழைக்கின்றார்
உன் துன்பம் துயரம் கவலை நீக்க
இன்றே அழைக்கின்றார்
உன்னை அழைக்கின்றார்
1. இரத்தம் தோய்ந்த கையை கண்டு
சித்தம் தெளியாயோ - 2
நித்தம் ஆணி பாய்ந்த காலை
முத்தம் செய்யாயோ
உத்தமர் இயேசு உந்தனுக்காக
இத்தனை வாதையோ
சத்திய நாதர் சத்தமாய் அழைக்கும்
சத்தம் கேளாயோ - 2 - (அன்பின் தேவன் இயேசு உன்னை)
2. தீயின் கட்டு உலக மாயை
எல்லாம் விரைந்தோடும் - 2
நோயின் வாடை பார சுமைகள்
சொல்லால் பறந்தோடும்
தாயின் பாசம் சேயின் நேசம்
ஒருநாள் மறைந்தோடும்
ஆயின் வாக்கு மாறா இயேசு
அன்போ வழிந்தோடும் - 2 - (அன்பின் தேவன் இயேசு உன்னை)