பல்லவி:
அல்லேலூயா ஆனந்தமே
நான் அல்லேலூயா பாடி ஆனந்திப்பேன்

அனுபல்லவி:
அல்லேலூயா ஆனந்தமே அருமை இரட்சகர் என்னை
அன்போடழைத்தனர் பாவங்கள் நீக்கினரே

சரணங்கள்:
1. இனி துன்பம் இல்லையே
இயேசு மகா ராஜன் எல்லோருக்கும் உண்டு
இன்பம் என்றென்றுமே - (அல்லேலூயா ஆனந்தமே)


2. தினம் போற்றிப் பாடுவேன்
இவ்வுலகை போலே விண்ணுலகில் ஓர் நாள்
இணைந்து பாடிடுவேன் - (அல்லேலூயா ஆனந்தமே)

தேடுதல்

இன்றைய வசனம்

சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.


சகரியா 9:9