பல்லவி

ஆத்துமமே என் முழு உள்ளமே - உன்
ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்த - உன்
ஆண்டவரைத் தொழுதேத்து

சரணங்கள்

1. போற்றிடும் வானோர் , பூதலத்துள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள - ( ஆத்துமமே )

2. தலை முறை தலை முரை தாங்கும் விநோத
உலக முன் தோன்றி ஒழியாத - ( ஆத்துமமே )

3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத் தருளும் , மேலான - ( ஆத்துமமே )

4. வாதை , நோய் , துன்பம் மாற்றி , அனந்த
ஓதரும் தயைசெய் துயிர் தந்த - ( ஆத்துமமே )

5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
முற்றும் கிருபையினால் முடி சூட்டும் - ( ஆத்துமமே )

6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,
இதயமே , உள்ளமே , என் மனமே - ( ஆத்துமமே )


தேடுதல்

இன்றைய வசனம்

சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.


சகரியா 9:9