ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ
வாகு தங்கு குருநாதா நமோ நமோ
ஆயர் வந்தனை செய் பாதா நமோ நமோ - அருரூபா

மாக மண்டல விலாசா நமோ நமோ
மேகபந்தியி னுவாசா நமோ நமோ
வான சங்கம விஸ்வாசா நமோ நமோ - மனுவேலா

நாகவிம்பம் உயர் கோலா நமோ நமோ
காகமும் பணிசெய் சீலா நமோ நமோ
நாடும் அன்பர் அனுகூலா நமோ நமோ - நரதேவா

ஏக மந்த்ரமுறு பூமா நமோ நமோ
யூக தந்த்ரவதி சீமா நமோ நமோ
ஏசு வென்ற திரு நாமா நமோ நமோ - இறையோனே

அறிவி நுருவாகிய மூலா நமோ நமோ
மறையவர்கள் தேடிய நூலா நமோ நமோ
அதிசய பராபர சீலா நமோ நமோ - அருளாளா

பொறிவினை ய்றாஅத சரீரா நமோ நமோ
குறையணுவிலாத குமாரா நமோ நமோ
புலன் முழுதாள் அதிகாரா நமோ நமோ - புது வேதா

நிறைவழியின் மேவிய கோனே நமோ நமோ
முறைகள் தவறாத விணோனே நமோ நமோ
நிதிபெருகு மாரச தேனே நமோ நமோ - நெறி நீதா

இறை தவிது பாடிய கீதா நமோ நமோ
பறைகள் பல கூடிய போதா நமோ நமோ
எருசலை யினீடிய தூதா நமோ நமோ - இறையோனே

தேடுதல்

இன்றைய வசனம்

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.


ஏசாயா 9:6